தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் நிலையான கடல்சார் மேலாண்மை குறித்த முதலாவது தேசிய மாநாடு - National Conference on Sustainable Coastal

இந்தியாவில் நிலையான கடல்சார் மேலாண்மை குறித்த முதலாவது தேசிய மாநாடு ஒடிசாவில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் நிலையான கடல்சார் மேலாண்மை குறித்த முதலாவது தேசிய மாநாடு
இந்தியாவில் நிலையான கடல்சார் மேலாண்மை குறித்த முதலாவது தேசிய மாநாடு

By

Published : Sep 11, 2022, 6:59 AM IST

புவனேஸ்வர்: இந்தியாவில் நிலையான கடல்சார் மேலாண்மை குறித்த முதலாவது தேசிய மாநாட்டை ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று (செப். 10)தொடங்கி வைத்தார். இந்தியாவின் கடலோர சமூகங்களின் பருவநிலை நெகழ்த்தன்மையை மேம்படுத்துதல் என்ற பசுமை பருவநிலை நிதியத்தின் ஆதரவு திட்டத்தால் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

கடலோர மற்றும் கடல்சார் உயிரினம், பருவநிலை தணிப்பு மற்றும் இசைவாக்கம் மற்றும் கடல்சார் மாசு ஆகிய மூன்று ஒருங்கிணைந்த கருப்பொருட்களில் கவனம் செலுத்துவதற்காக இந்தியாவின் 13 கடலோர மாநிலங்களின் அதிகாரிகளை ஒருங்கிணைப்பது தான் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பூபேந்தர் யாதவ், இந்திய கடற்கரை, நாட்டிற்கு அபரிமிதமான கேந்திர, பொருளாதார மற்றும் சமூக முக்கியத்துவத்தை அளிக்கிறது என்றும், நமது கடலோரப் பகுதிகளில் 17,000 க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஆதரவான பன்முகத்தன்மை வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதோடு பருவநிலை மாறிவரும் சூழலில், கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்களின் நெகிழ்தன்மையை கட்டமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:‘சட்ட கல்லூரிகளில் தீர்ப்புகள் பாடமாக இடம்பெற வேண்டும்’ - நீதிபதி உதய் உமேஷ் லலித்

ABOUT THE AUTHOR

...view details