டெல்லி:மத்திய உள்துறை அமைச்சக்கம் இன்று (ஆக. 12) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2022ஆம் ஆண்டில் நாடு முழுவதும் சிறந்த புலன் விசாரணைக்கான விருது சிறப்பாக செயல்பட்ட 151 காவலர்களுக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், சிபிஐ அதிகாரிகள் 15 பேர், மகாராஷ்டிரா காவலர்கள் 11 பேர், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேச காவலர்கள் தலா 10 பேர், கேளரா, ராஜஸ்தான், மேற்கு வங்க காவலர்கள் தலா 8 பேர், பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச காவலர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும், இதில் 28 மகளிர் காவலர்களும் அடக்கம்.