தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹைதராபாத் விடுதலை தினம் - உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

ஹைதராபாத் விடுதலை நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் விடுதலை தினம் - உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு
ஹைதராபாத் விடுதலை தினம் - உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

By

Published : Sep 16, 2022, 8:50 AM IST

ஹைதராபாத் (தெலங்கானா):நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்த ஹைதராபாத், ‘ஆப்பரேஷன் போலோ’ என்ற ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்த நாளை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ‘ஹைதராபாத் விடுதலை தினம்’ கொண்டாடப்படுகிறது.

இந்த வகையில் நடப்பாண்டு ஹைதராபாத் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஹைதராபாத்தில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளதாக மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் கிஷன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தெலங்கானாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களை அமித் ஷா சந்திக்கவுள்ளார். மேலும் செகந்திராபாத்தில் நடைபெறும் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவிலும் அமித் ஷா பங்கேற்க உள்ளார்.

இதையும் படிங்க:எம்பியின் பிஏ எனக்கூறி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சுற்றிய நபர் கைது

ABOUT THE AUTHOR

...view details