தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்டாலினுடன் அமித் ஷா பேச்சு - அமித் ஷா

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் பேசினார். மழை பாதிப்பு குறித்து மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு நிதி கோரிய நிலையில், இந்தத் தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளது.

ஸ்டாலினுடன் அமித் ஷா பேச்சு
ஸ்டாலினுடன் அமித் ஷா பேச்சு

By

Published : Nov 17, 2021, 11:47 AM IST

Updated : Nov 17, 2021, 12:07 PM IST

சென்னை:இந்தத் தொலைபேசி உரையாடலின்போது, தமிழ்நாட்டில் பெய்த மழை, வெள்ள பாதிப்பு குறித்து ஸ்டாலினிடம் அமித் ஷா கேட்டறிந்தார். அப்போது, வெள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதி வழங்குமாறும், உடனடியாக முதற்கட்ட நிதியை விடுவிக்குமாறும் அமித் ஷாவிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, அமித் ஷாவை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு கோரினார்.

அதன்படி, இரண்டாயிரத்து 79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யுமாறு அமித் ஷாவிடம் டி.ஆர். பாலு வலியுறுத்தினார். முதற்கட்டமாக தமிழ்நாட்டிற்கு 550 கோடி ரூபாய் விடுவிக்குமாறு தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: Santhanam on Jai Bhim issue: அடுத்தவரைத் தாழ்த்திப் பேசுவது தேவையற்றது

Last Updated : Nov 17, 2021, 12:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details