தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்திவருகின்றன. இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தொகுதி பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ளார்.
முன்னதாக அவர், விழுப்புரத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டார். பின்னர் அவர் அங்கிருந்து சென்னை திரும்பினார். அப்போது, விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் மதிய உணவு உண்டனர். அவருடன் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோரும் உணவு அருந்தினர்.