தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூன்று மாதங்களுக்கு கரோனா தடுப்பூசி மீதான கலால் வரி ரத்து! - ஆக்ஸிஜன் தட்டுப்பாடு

டெல்லி: கரோனா இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், இறக்குமதி செய்யப்படும் கரோனா தடுப்பூசி மீதான கலால் வரியை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்வதாக, பிரதமர் தலைமையிலான உயர் மட்ட குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு மருந்து
கரோனா தடுப்பூசி

By

Published : Apr 24, 2021, 5:56 PM IST

கரோனா இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றன. கரோனா தடுப்பு மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று(ஏப்.24) உயர் மட்டக்குழு ஆலோசனையில் ஈடுபட்டது. இந்த ஆலோசனையின்போது, ரெம்டெசிவர் மருந்து, அதனைத் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் மீதான இறக்குமதி வரிக்கு விலக்கு அளித்ததை பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.

மேலும், அதைப் போல ஆக்ஸிஜன் மற்றும் கரோனா தடுப்பு மருந்துகளின் பற்றாக்குறை கருத்தில் கொண்டு, ஆக்ஸிஜன் தயாரிப்பு, சேமிப்பு தொடர்பான உபகரணங்கள் இறக்குமதி செய்ய விதிக்கப்படும் கலால் வரி, சுகாதார செஸ் வரி உள்ளிட்டவை 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details