தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இனி போலி மாத்திரைகளுக்கு கடிவாளம் .. வருகிறது கியூ ஆர் கோடு.. - 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமல்

போலி மருந்துகளின் விற்பனை மற்றும் உற்பத்தியை கட்டுபடுத்துவதற்காக 300 மருந்துகளுக்கு QR குறியீடுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது.

Etv Bharatபோலி மருந்து உற்பத்தியை தடுக்க QR  கோட்டை அறிமுகப்படுத்திய மத்திய அரசு
Etv Bharatபோலி மருந்து உற்பத்தியை தடுக்க QR கோட்டை அறிமுகப்படுத்திய மத்திய அரசு

By

Published : Nov 26, 2022, 7:00 PM IST

இந்தூர் (மத்திய பிரதேசம்):நாடு முழுவதும் புழக்கத்தில் இருக்கும் போலி மருந்து உபயோகத்தை கட்டுபடுத்த ஒன்றிய அரசு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனடிப்படையில் தற்போது 300 மருந்து வகைகளை தயாரிப்பதில் மருந்து பற்றிய விவரங்களை வழங்கும் QR குறியீட்டைஅறிமுகப்படுத்தும் செயல்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய விதி 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.

1940-ம் ஆண்டு வந்த மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்ட திருத்தத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசு அவசர சட்டத்தை அமல்படுத்தியது. மேலும் தற்போதுள்ள திருத்தங்களின் படி புதிய விதியின்படி மருந்து நிறுவனங்கள் அவைகளின் தயாரிப்பு மருந்துகளுக்கு க்யூஆர் குறியீடை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட உள்ளது. அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் நான்கு முக்கிய புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன

இது குறித்து பேசிய அனைத்திந்திய வேதியியலாளர்கள் மற்றும் மருந்துகளுக்கான அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜீவ் சிங்கால் கூறுகையில், "சமீபத்தில் இந்திய அரசு, மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940-ல் மாற்றங்களைச் செய்து, ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. புதிய விதியின்படி, மருந்து அட்டைகளில் க்யூஆர் குறியீடுகளை வைப்பது கட்டாயமாகும். ஆகஸ்ட் 1, 2023 முதல் இந்த புதிய விதி அமலுக்கு வரவுள்ளதால், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஆதரித்து QR குறியீடுகள் அறிமுகப்படுத்தப்படுவதால் போலி மருந்து தயாரிப்பு தடுக்கப்படும்’ எனக் கூறினார்.

இதையும் படிங்க:முடிவற்ற மேல்முறையீடுகளால் உச்ச நீதிமன்றத்தின் சுமையை அரசு நிறுத்த வேண்டும் - அட்டர்னி ஜெனரல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details