தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிலக்கரி தட்டுப்பாடு குறித்து அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளக்கம்

நாடு முழுவதும் நிலக்கரித் தடுப்பாடு நிலவுவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், ஜார்கண்ட் மாநில சுரங்கங்களில் ஆய்வு செய்த அமைச்சர் பிரகலாத் ஜோஷி தற்போதைய நிலவரம் குறித்து விளக்கமளித்தார்.

Union Coal Minister
Union Coal Minister

By

Published : Oct 14, 2021, 3:28 PM IST

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நிலக்கரித் தட்டுப்பாடு நிலவுவதாக கடந்த பத்து நாள்களாக புகார் எழுந்துவருகிறது. பருவமழை காரணமாக நிலக்கரி சுரங்கங்களில் தேவைக்கான நிலக்கரி வெட்டி எடுப்பதில் சிக்கல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநில நிலக்கரி சுரங்கங்களை நேரில் ஆய்வு செய்த நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "நிலக்கரி இருப்பு குறித்த தற்போதைய நிலவரத்தை விளக்கியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவது உண்மை. அதேவேளை நிலைமை சில நாள்களில் சீராகிவிடும். கடந்த நான்கு நாள்களாக அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் இருபது லட்சம் டன் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. எதிர்காலத்திலும் தட்டுப்பாடு இன்றி விநியோகம் மேற்கொள்ளப்படும் என அலுவலர்கள் உறுதியளித்துள்ளனர். தட்டுப்பாடு இல்லை என நான் கூர மாட்டேன். அதேவேளை, நிலைமை விரைவில் சீர் செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார்.

கடந்த நிதியாண்டில் இந்தியாவில் ஏழாயிரத்து 300 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் நிலக்கரி உற்பத்தி சுமார் இரண்டு விழுக்காடு வரை சரிவைச் சந்தித்துள்ளதாக நிலக்கரி அமைச்சக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க:சாம்பார் சரியில்லை - கர்நாடகாவில் தாய், சகோதரி சுட்டுக்கொலை

ABOUT THE AUTHOR

...view details