ஒன்றிய அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவும் மாற்றியமைக்கப்படவும் உள்ளது. இதற்கான விழா இன்று (ஜூலை 7) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
ஒன்றிய அமைச்சரவை மாற்றியமைப்புத் தொடர்பாக டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று இருந்தனர்.
அதில் 43 மக்களவை உறுப்பினர்கள் ஒன்றிய அமைச்சர்களாக பதவியேற்க உறுதிபடுத்தப்பட்டனர்.
புதிய ஒன்றிய அமைச்சர்களின் பின்னணி என்ன?
- இந்த புதிய அமைச்சரவையில் 2 பேர் பட்டியலினத்தவரும், 3 பேர் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவரும் இடம்பெற்றுள்ளனர்.
- குறிப்பாக, இந்த புதிய அமைச்சரவையில் 13 வழக்கறிஞர்கள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள், 7 சமூக ஆர்வலர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- இந்த அமைச்சரவை மறுசீரமைப்பில் இடம்பெற்று அமைச்சர்களாகும் 14 புதிய அமைச்சர்கள் 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்களாக உள்ளனர்.
- இந்த புதிய அமைச்சரவையில் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய மதங்களைச் சேர்ந்த ஒருவரும் புத்த மதத்தைச் சார்ந்த இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: ஒன்றிய அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா - யார் யாரெல்லாம் பதவி விலகினார்கள்?