தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லடாக்கில் மத்திய பல்கலைக்கழகம்! - மத்திய பல்கலைக்கழகம்

லடாக்கில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் அனுராக் தாகூர் கூறினார்.

Anurag Thakur
Anurag Thakur

By

Published : Jul 22, 2021, 4:52 PM IST

டெல்லி : யூனியன் பிரதேசமான லடாக்கில் மத்திய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதற்காக ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உறுதிப்படுத்தினார்.

இது குறித்து அனுராக் தாகூர், “லடாக் பல்கலைக்கழகத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

யூனியன் பிரதேசத்தை உயர்த்த உள்ளூர் தொழிலதிபர்கள் வியாபாரிகள் முன்வர வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : ஜெ. பல்கலைக்கழகம்- அமைச்சர் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details