டெல்லி: 2023-24ஆம் நிதி ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று(பிப்.1) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.
அதன்படி, மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சமாக பாதுகாப்புத்துறைக்கு 5.94 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு 2.70 லட்சம் கோடி ரூபாயும், ரயில்வே துறைக்கு 2.41 லட்சம் கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு 2.06 லட்சம் கோடி ரூபாயும், உள்துறைக்கு 1.96 லட்சம் கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்திற்கு 1.78 லட்சம் கோடியும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்திற்கு 1.60 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்திற்கு 1.25 லட்சம் கோடி ரூபாயும், தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்திற்கு 1.23 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Union Budget 2023 : ஒரு ரூபாயில் வரவு - செலவு எவ்வளவு?