டெல்லி: 2023-24ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்ற மக்களவையில் இன்று(பிப்.1) தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் உரையில், கர்நாடக மாநில விவசாயிகளுக்கான சிறப்பு திட்டங்களை அறிவித்தார்.
கர்நாடகாவில் பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்காக ஐந்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், கர்நாடக மாநிலத்திற்கு வறட்சி பாதிப்பு நிதியாக 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.