தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Union Budget 2022: அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம்

Union Budget 2022: மத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கை அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் அடித்தளமாக இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

By

Published : Feb 1, 2022, 12:51 PM IST

Union Budget 2022: மத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கை 2022-23ஐ இன்று (பிப்ரவரி 1) மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்தார். இது தாளில்லா இரண்டாவது டிஜிட்டல் வரவு செலவுத் திட்ட அறிக்கையாகும்.

தனது நான்காவது மத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல்செய்கையில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டதாவது:

  • இந்த வரவு செலவுத் திட்ட அறிக்கை, அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது - இது இந்தியா 75ஆம் ஆண்டிலிருந்து 100 வரை...

மேலும் அவர் கூறுகையில், "எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா வலிமையான நிலையில் உள்ளது. மத்திய அரசு பொது முதலீடுகளை நவீன உள்கட்டமைப்புகளில் செலுத்த தொடர்ந்து ஊக்கமளிப்பதில் கவனம் செலுத்தும்.

பிரதமரின் கதி சக்தி திட்டம் வரும் ஆண்டுகளின் அரசின் முக்கியமானவற்றில் ஒன்றாகத் திகழும். இந்தத் திட்டத்தின் மூலம் சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், போக்குவரத்து, நீர்வழிகள், தளவாடங்கள் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

ஆத்மநிர்பார் பாரத் திட்டம் (உள் நாட்டிலேயே தயாரிப்போம்) சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன்மூலம் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதன் உற்பத்தித் திறன் என்பது 30 லட்சம் கோடியாக இருக்கும்" என்றார்.

இதையும் படிங்க: மத்திய பட்ஜெட் 2022-23 முழுச் செய்தியையும் எளிய முறையில் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details