அகமதாபாத்:குஜராத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் இன்று (நவ.27) பேசிய ஜேபி நட்டா பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான பொது சிவில் சட்டம் குறித்து தெரிவித்தார். அப்போது அவர், பொது சிவில் சட்டம்விரைவில் பல மாநிலங்களில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) ஒரு "தேசியப் பிரச்சினை". நாட்டின் வளங்களும் பொறுப்புகளும் அனைவருக்கும் சமம். ஆகவே, பொது சிவில் சட்டமானது வரவேற்கத்தக்க ஒன்றாகும் எனத் தெரிவித்தார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘ நாட்டிற்கும் சமூகத்திற்கும் எதிராக செயல்படும் சக்திகளைக் கட்டுப்படுத்துவது மாநிலத்தின் பொறுப்பு. மனித உடலில் உள்ள ஆன்டிபாடிகளைப் போல, கெட்ட செல்களைக் கண்காணிப்பதும், தேச விரோத செல்களை கட்டுப்படுத்துவதும் அரசின் பொறுப்பு. சில செல்கள் பூமிக்கடியில் செயல்படுகின்றன. அத்தகைய செல்களைக் கண்காணிக்க இந்த பயங்கரவாத எதிர்ப்பு குழு தேவைப்படுகிறது. பாஜக அனைவரின் வளர்ச்சிக்குமான கட்சி. மறைந்த ஏபிஜே அப்துல் கலாம் பாஜக ஆதரவுடன் இந்தியாவின் குடியரசுத் தலைவரானார். அதன்பின் மோடி தலைமையிலன மத்திய அரசு பல முஸ்லிம் ஆளுநர்களையும் நியமித்துள்ளது.