காரைக்கால் (புதுச்சேரி):தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்த நிலையில், புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் குறிப்பாக காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த நல்லாத்தூர், மத்தளங்குடி, பண்டாரவடை, குரும்பகரம், கெளக்குடி உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் பெய்து வந்த கனமழை காரணமாக சுமார் 1000-ஏக்கர் சம்பா பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாத அவலம்
இதில் மழை நீர் வடியாமல் இருந்ததற்குக் காரணம், வடிகால் நீர் செல்லும் சடையன் வாய்க்கால் சரிவர தூர்வாரப்படாமல் இருந்தது தான் காரணம் எனக்கூறி, சம்பா பயிர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 4 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய சொந்த செலவில் சடையன் வடிகால் வாய்க்காலில் படிந்துள்ள ஆகாயத்தாமரைகளை சுத்தம் செய்தனர்.