தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் - ஸ்ரீநகர் சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

under-construction-bridge-collapses-in-uttarakhand-several-trapped
under-construction-bridge-collapses-in-uttarakhand-several-trapped

By

Published : Nov 23, 2020, 6:53 AM IST

உத்தரகாண்ட் மாநிலத்தின் சிவபுரி அருகே உள்ள ரிஷிகேஷ் - ஸ்ரீநகர் சாலையில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி திடீரென நேற்று இடிந்து விழுந்துள்ளது.

இந்நிலையில், கட்டட தொழிலாளர்கள் சிலர் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்திற்கு கீழேயே தங்கியுள்ளனர். இதனால் இடிபாடுகளில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இதனிடையே இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அதேபோல் பேரிடர் மீட்புப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் பலரும் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதா கேரள போலீஸ் சட்டம்?

ABOUT THE AUTHOR

...view details