ஹைதராபாத் :தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ், எம்.சூரஜ் எனும் இரண்டு காவலர்கள், புகார் கொடுக்க வருபவர்களிடம் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரில் கடந்த 20ஆம் தேதி அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
லஞ்சம் கேட்ட போலீஸார்- கட்டுக்கட்டாக சிக்கிய பணம் - லஞ்சப்புகாரில் சிக்கிய போலீஸார்
லஞ்ச புகாரில் சிக்கிய தெலங்கானா காவலர்கள் இருவரிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத 34 லட்சம் ரூபாய் ரொக்கம், 9 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க, வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கட்டுக்கட்டாக சிக்கிய பணம்
இந்நிலையில், விசாரணையின்போது நிசாமாபாத்தில் உள்ள காவலர் ஜெகதீஷின் ஆக்சிஸ் வங்கியின் லாக்கரில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ. 34,40,200 லட்சம் ரொக்கம், 182.56 கிராம் தங்கம், 157 கிராம் வெள்ளி ஆபரணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக, அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ராமநாதபுரம் ரவுடி சேலத்தில் ஓட ஓட விரட்டிக் கொலை: சிசிடிவி காட்சி வெளியீடு