ஜல்பைகுரி:மேற்குவங்கம் மாநிலம், ஜல்பைகுரி பகுதியைச் சேர்ந்தவர், ராம்பிரசாத் தேவன். கூலித் தொழிலாளியான இவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். திடீர் மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் நலப் பிரச்னைகளால் அவதிப்பட்ட தாயை தனியார் மருத்துவமனையில் ராம் பிரசாத் அனுமதித்துள்ளார்.
சிகிச்சைப் பலனின்றி அவரது தாய் உயிரிழந்தார். தாயின் சடலத்தை வீட்டுக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் உதவியை ராம்பிரசாத் நாடியுள்ளார். வழக்கமாக கேட்கும் தொகையை விட அதிகமாக 3ஆயிரம் ரூபாய் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கேட்டதாக கூறப்படுகிறது. ஆம்புலன்ஸ் வசதிக்குப் போதிய பணம் இல்லாததால் தாயின் சடலத்தை ராம் பிரசாத்தும் அவரது தந்தையும் தோளில் சுமந்து கொண்டு 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர்.