தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Sedition law in India: தேசத்துரோக வழக்கு பதிய தடை; ஐ.நா. மனித உரிமை அமைப்பு வரவேற்பு! - தேசத்துரோக வழக்கு

Sedition law in India: இந்தியாவில் புதிதாக தேசத்துரோக வழக்கு பதிய மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள உத்தரவுக்கு ஐ.நா., மனித உரிமை அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

UN
UN

By

Published : May 12, 2022, 7:00 PM IST

புதுடெல்லி: இந்திய தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேச துரோக சட்டத்தின் (Sedition law in India) 124ஏ சட்டப்பிரிவுக்கு எதிராக அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது, “நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும், ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த இந்த தேச துரோக சட்டம் தேவையா?” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தொடர்ந்து மே11ஆம் தேதி, தேச துரோக சட்டத்தை மறுபரீசிலனை செய்வதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், 124ஏ சட்டப்பிரிவை ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்கும் வரை, மத்திய அரசும் மாநில அரசுகளும் தேச துரோக சட்டத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை ஐ.நா., மனித உரிமை அமைப்பு வரவேற்றுள்ளது. இதை வரவேற்றுள்ள ஐ.நா. “அமைதியான விமர்சகர்களுக்கு எதிராக தன்னிச்சையாகவும் பரவலாகவும் பயன்படுத்தப்பட்ட தேசத்துரோகச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கான இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். சட்டத்தின் கீழ் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய பரிசீலிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தேச துரோக வழக்கு பதிய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

ABOUT THE AUTHOR

...view details