கீவ்:ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடங்கி ஓராண்டை நெருங்க உள்ளது. உக்ரைன் நகரங்களில் ரஷ்ய வீரர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். போரால் இரு நாடுகளிலும் பெரிய அளவில் பொருள் மற்றும் உயிர் சேதங்கள் நிகழ்ந்து வருகின்றன. கோடிக்கணக்கிலான மக்கள் தங்கள் அடையாளங்களை இழந்து அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி பல்வேறு தரப்பினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. உக்ரைன் ராணுவ வீரரின் மார்பகத்தில் பாய்ந்து வெடிக்காமல் இருந்த ரஷ்ய ராணுவத்தின் கையெறி குண்டை, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உக்ரைன் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மிலியர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் "இதயத்தில் ஏற்படும் ஒவ்வொரு காயமும் ஆபத்தானது அல்ல" எனப் பதிவிட்டுள்ளார். அசால்ட் காலிபர் ஆயுதங்களை கொண்டு ரஷ்ய ராணுவ வீரர்கள் வீசிய VOG 25 என்ற கையெறி குண்டு உக்ரைன் வீரரின் மார்பகத்தை துளைத்தது.