டெல்லி:ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, மத்திய அரசு 'ஆபரேசன் கங்கா' என்னும் பெயரில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை ஏர் இந்தியா, இன்டிகோ விமானங்கள் மூலம் பாதுகாப்பாக மீட்டுவருகிறது. இதுவரை 6 விமானங்கள் மூலம் 21 தமிழ் மாணவர்கள் உள்பட 1,369 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து இந்தியர்கள் 182 பேருடன் ருமேனியாவின் புக்கரெஸ்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏழாவது விமானம் மும்பை விமானநிலையம் வந்ததாக வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பதிவில், "ஆப்ரேஷன் கங்காவின் கீழ் ஏழாவது விமானம் ருமேனியாவின் புக்கரெஸ்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.