டெல்லி:ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, மத்திய அரசு 'ஆபரேசன் கங்கா' என்னும் பெயரில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் பாதுகாப்பாக மீட்டுவருகிறது. இதுவரை 5 விமானங்கள் மூலமாக 21 தமிழ்நாடு மாணவர்கள் உள்பட 1,156 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க டெல்லியிலிருந்து ருமேனியாவிற்கும், ஹங்கேரிக்கும் இரண்டு விமானங்கள் இயக்க இன்டிகோ நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்தியர்களை மீட்க இரண்டு விமானங்கள் இயக்கப்படும்; இன்டிகோ - இந்தியர்களை மீட்க இன்டிகோ நிறுவனம்
உக்ரைனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க டெல்லியிலிருந்து ருமேனியாவிற்கும், ஹங்கேரிக்கும் இரண்டு விமானங்கள் இயக்கப்படும் என்று இன்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்டிகோ நிறுவனம் தரப்பில், "உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் நோக்குடன் இன்டிகோ நிறுவனத்தின் ஏ321 ரக விமானங்கள் இரண்டு இயக்கப்பட உள்ளது. இந்த விமானங்கள் டெல்லியிலிருந்து ருமேனியாவில் உள்ள புக்கரெஸ்ட் விமான நிலையத்திற்கும், ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் விமான நிலையத்திற்கும் இன்று முதல் இயக்கப்படும். இந்த இக்கடான சூழ்நிலையில் மத்திய அரசுக்கு அனைத்து ஆதரவையும் வழங்க தயாராக உள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தல்