தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரஷ்யா-உக்ரைன் போர்... இந்தியர்களை வெளியேற்ற மாற்று ஏற்பாடு... - russia war update

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக வான்வாழி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், மாற்று வழியில் இந்தியர்கள் வெளியேற்ற பரிசீலித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Russia-Ukraine war  Delhi holds high-level meetings
Russia-Ukraine war Delhi holds high-level meetings

By

Published : Feb 24, 2022, 4:39 PM IST

டெல்லி: ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே 2014 முதல் போர் சூழல் ஏற்பட்டுவந்த நிலையில் இன்று(பிப்.24) போர் வெடித்துள்ளது. ரஷ்ய ராணுவப்படையால் உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதிகளில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இதனிடையே உக்ரைன் நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட லுஹான்ஸ்க் பகுதியில் 5 ரஷ்ய விமானங்கள், 1 ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த போர் காரணமாக உலக நாடுகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. வான்வழி போக்குவரத்து தடைபட்டுள்ளது. அதன்விளைவாக, உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்தியர்களை மீட்க டெல்லியிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI1947)மீண்டும் திருப்பி விடப்பட்டது. இதனால் மாற்று வழியில் இந்தியர்கள் வெளியேற்றுவது குறித்து டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டது. இந்த கூட்டத்தில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் சார்பில், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களுக்காக உதவி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வான்வாழி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் மாற்று வழியில் இந்தியர்கள் வெளியேற்ற பரிசீலித்து வருகிறோம். விரைவில் தரைவழியில் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உக்ரைன் போர்: டெல்லி திரும்பிய ஏர் இந்தியா விமானம்..!

ABOUT THE AUTHOR

...view details