லண்டன்:இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று (நவ.13) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மனை பதவியிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் துறை மீது குற்றம் சாட்டி அமைச்சர் செய்திகள் வெளியிட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் என லண்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் கோவா வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மன் பிரிட்டன் கேபினட் மூத்த அமைச்சராக இருந்து வருகிறார். இவர் பலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அமைச்சர் சுயெல்லா பிரேவர்மன் செய்திகளுக்கு அளித்த கட்டுரையில் பாலஸ்தினியர்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்கள் செய்பவர்களுக்குக் காவல் துறையினர் ஆதரவாகவும் மென்மையாகவும் நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டியது தொடர்பாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் ரிஷி சுனக் எதிர்க்கட்சிகளில் தாக்குதலுக்கு ஆளானர். மேலும் அமைச்சர் சட்டத்தை மீறியதாகக் கூறி அவரை பதவி நீக்கம் செய்யச் சொல்லி எதிர்க்கட்சிகள் அழுத்தம் தரத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.