டெல்லி: G20 மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் காலநிலை மாற்றம் என்பது உலக அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனை சரி செய்ய பசுமை காலநிலை நிதி (Green Climate Fund) $2 பில்லியன் டாலர் வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
COP15 கோபன்ஹேகன் உடன்படிக்கையைத் தொடர்ந்து 194 நாடுகள் ஒன்று இணைந்து பசுமை காலநிலை நிதியை (Green Climate Fund) உருவாக்கியது. இதற்காக தற்போது இங்கிலாந்து £1.62 பில்லியன் ($2 பில்லியன்) அளிக்க உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை பிரிட்டிஷ் உயர் அதிகாரிகள் இந்தியாவில் தற்போது தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் G20 மாநாட்டில் ஐக்கிய அரபு நாடுகளில் COP28 காலநிலை குறித்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும், பொருளாதாரம் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவவும் தனது அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:ஜி20 விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின்.. அமெரிக்க அதிபருடன் கலந்துரையாடல்!