மத்தியப் பிரதேசம்(உஜ்ஜைன்) : உஜ்ஜைன் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அனில் ஃபிரோஜியா தன்னுடைய தொகுதி வளர்ச்சிக்காக, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கத்காரி விடுத்த சவாலை ஏற்று தன்னுடைய 15 கிலோ எடை குறைத்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி மேடையில் வைத்து மக்களவை உறுப்பினர் அனில் ஃபிரோஜியாவிற்கு ஓர் வாக்குறுதி தந்தார். அதாவது, மக்களவை உறுப்பினர் அனில் ஃபிரோஜியா தன்னுடைய உடல் எடையைக் குறைத்தால், அவர் குறைக்கும் ஒவ்வொரு கிலோவிற்கும் 1000 கோடி ரூபாய் நிதியுதவி அவரது மாநில வளர்ச்சிக்காக நான் தருவேன் என சவால் விடுத்தார்.
இதையடுத்து, அந்த சவாலை ஏற்ற மக்களவை உறுப்பினர் அனில் ஃபிரோஜியா 15 தன்னுடைய உடல் எடையில் 15 கிலோ குறைத்துள்ளார். இதுகுறித்து ஃபிரோஜியா கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி ‘ஃபிட் இந்தியா’ முன்னெடுப்பைத் தொடங்கினார்.
ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி , நான் குறைக்கும் ஒவ்வொரு கிலோவிற்கும் என் தொகுதி வளர்ச்சிக்காக 1000 கோடி ரூபாய் தருவதாக மேடையில் ஒப்புக்கொண்டார். நான் இதை சவாலாக எடுத்து தற்போது 15 கிலோ வரைக் குறைத்துள்ளேன். இன்னும் சில கிலோக்கள் எடை குறைத்து என் தொகுதிக்கு நிதியுதவிகள் பல வழங்கக் கேட்பேன். என்னுடைய தொகுதி நலனிற்காக நான் இதை அப்படியே தொடர தயாராக உள்ளேன்” என்றார்.
இதை நிகழ்த்த அனில் ஃபிரோஜியா கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைபிடித்தாதாகவும் கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் அதிகாலை 5:30 மணிக்கு எழுவேன். ஓட்டம், உடற்பயிற்சி, யோகா என எனது காலை நேர வேலைகள் முடியும்.
பின், நான் ஒரு ஆயுர்வேத உணவுக் கட்டுப்பாட்டு வரைமுறையைக் கடைபிடித்தேன். நான் சிறிய அளவிலேயெ காலை உணவு உட்கொள்வேன். மதியம் மற்றும் இரவு வேளைகளுக்கு ஒரு பாத்திரம் நிறைய பச்சை காய்கறிகள், ஒரு தானியங்களில் செய்த ரொட்டி, சாலட் போன்றவற்ரை தான் உட்கொள்வேன். எப்போதாவது கேரட் சூப், பேரிச்சம்பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்வதுண்டு” என்றார்.
இதையும் படிங்க: இன்டர்போல் பொதுச்சபையில் இன்று பிரதமர் உரையாற்றுகிறார்