தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காதலும் வாழ்க்கையும் என பாடம் நடத்தி எல்லை மீறிய ஆசிரியர் போக்சோவில் கைது - ஆசிரியர் போக்சோவில் கைது

மத்தியப்பிரதேசத்தில் உஜ்ஜைன் மாவட்டத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

காதலும் வாழ்வும் என பாடம் நடத்தி எல்லை மீறிய ஆசிரியர் போக்சோவில் கைது
காதலும் வாழ்வும் என பாடம் நடத்தி எல்லை மீறிய ஆசிரியர் போக்சோவில் கைது

By

Published : Nov 6, 2022, 11:52 AM IST

உஜ்ஜைன்(ம.பி):மத்தியப்பிரதேசம் மாநிலத்தின், உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மிஷினரி பள்ளி ஒன்றில், லிஜோய் என்னும் ஆசிரியர் பல நாட்களாக காதலும் வாழ்க்கையும் என்னும் தலைப்பில் பயிற்றுவந்ததாகவும், அப்போது மாணவிகளை அழைத்துப்பாலியல் ரீதியான தொடுதலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள், கடந்த சனிக்கிழமை ( நவம்பர் 5) தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதில் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவிகளின் பெற்றோர், பள்ளிக்கு வருகை தந்து கற்களை வீசி எறிந்து முழக்கங்கள் எழுப்பினர். அப்போது, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியருக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, அவர்கள் பள்ளியை மூடவேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், பள்ளிக்கு வருகை தந்து, பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகளின் பெற்றோர்களை சமாதானம் செய்தனர். பின், பள்ளி மாணவிகள் கொடுத்தப்புகாரின்பேரில் ஆசிரியரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை ஆசிரியரின் தவறான நடத்தை குறித்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளி நிர்வாகத்தில் தெரிவித்தபோது, அவர்கள் இதுகுறித்து பொதுவெளியில் தெரிவிக்கக்கூடாது எனவும், தெரிவித்தால் பள்ளியில் இருந்து அவர்களை நீக்கிவிடுவதாகவும் பள்ளி நிர்வாகத்தினர் மிரட்டல் விடுத்தனர். காவல் துறையினர் இதுகுறித்தும் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: பாம்பைக்கண்டு பயம்கொள்ள வேண்டாம்; இனி பாம்புகளை மீட்க 'சர்ப்பா' செயலி!

ABOUT THE AUTHOR

...view details