உஜ்ஜைன்: உஜ்ஜைன் சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கு தொடர்பாகப் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (செப்.28) காவல்துறை தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் உஜ்ஜைன் காவல் துறை கண்காணிப்பாளர் சச்சின் சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "உஜ்ஜைன் சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றக் காட்சியை மீண்டும் உருவாக்குவதற்காகக் குற்றம் சாட்டப்பட்ட பரத் சோனி என்பவரைச் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போது பரத் சோனி தப்பி ஓட முயன்றதாகவும் அப்போது அவருக்கும், அவரை துரத்திப் பிடிக்கச் சென்ற காவல்துறை அதிகாரிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது" என்று உஜ்ஜைன் காவல் துறை கண்காணிப்பாளர் சச்சின் சர்மா தெரிவித்துள்ளார்.