போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் புகழ் பெற்ற மஹாகள் கோயில் உள்ளது. இங்கு வந்த இரண்டு இளம்பெண்கள் தனித்தனியாக ரீல்ஸ்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். அதிலும் ஒரு பெண் பாலிவுட் பாடலுக்கு கோயில் வளாகத்தில் நடனமாடியும், மற்றொரு பெண் கோயிலின் கருவறையில் அமர்ந்து திரைப்பட வசனங்களையும் பேசுகிறார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது.
இந்த நிலையில் இதுகுறித்து கோயில் பூசாரி மகேஷ் கூறுகையில், “இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால் கோயிலின் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுகிறது. தற்போது இந்த பெண்களின் வீடியோக்கள் வைரலாகியது மிகவும் கண்டிக்கத்தக்கது.