தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - என்டிஏ அறிவிப்பு! - ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

2022ஆம் ஆண்டுக்கான யுஜிசி நெட் தேர்வின் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

UGC-
UGC-

By

Published : Nov 4, 2022, 4:49 PM IST

டெல்லி:யுஜிசி நெட் (UGC NET) தேர்வு என்பது தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் தகுதித்தேர்வு. இதில் தேர்ச்சி பெறுவோர், தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த ஆண்டுக்கான யுஜிசி நெட் தேர்வு நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 12 லட்சம் பேர் நெட் தேர்வு எழுதினர். இந்த நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான யுஜிசி நெட் தேர்வின் முடிவுகள் நாளை(நவ.5) வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தேர்வர்கள், www.nta.ac.in என்ற இணையதளத்தில், தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப்பதிவிட்டு, தேர்வு முடிவுகளைத்தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை...!

ABOUT THE AUTHOR

...view details