உடுப்பி (கர்நாடகம்): கடந்த 40 மணிநேரத்தில் டாக் டே புயலின் காரணமாக நடுக்கடலில் சிக்கிய மீனவர்கள் ஒன்பது பேர் கடற்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அரபிக் பெருங்கடலில் இருந்து 9 பேர் மீட்பு! - 9 people have been rescued for the past 40 hours from Arabian sea
டாக் டே புயலால் கடலில் தத்தளித்து வந்த ஒன்பது பேரை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
![அரபிக் பெருங்கடலில் இருந்து 9 பேர் மீட்பு! அரபிக் பெருங்கடலில் இருந்து 9 பேர் மீட்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11789670-531-11789670-1621242009989.jpg)
அரபிக் பெருங்கடலில் இருந்து 9 பேர் மீட்பு
கப்பு கலங்கரை விளக்கம் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 13 நாட்டிகல் மைல் தொலைவில் படகில் இவர்கள் தத்தளித்து வந்துள்ளனர். இவர்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் அழுது கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அரபிக் பெருங்கடலில் இருந்து 9 பேர் மீட்பு
மீட்கப்பட்டவர்கள் முல்லா கான், கெளரவ் குமார், சாந்தனு, அகமது ராகுல், தீபக், பிரசாந்த், துஷார், லக்ஷ்மி நாராயணா ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.