தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மோடியை சந்திக்கும் தாக்கரே- காரணம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடியை மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) டெல்லியில் சந்தித்து பேசுகிறார்.

By

Published : Jun 7, 2021, 6:22 PM IST

Uddhav Thackeray to meet PM Modi  Thackeray to meet PM Modi  Uddhav Thackeray to meet PM Modi on maratha issue  Uddhav Thackeray to meet Modi  மோடியை சந்திக்கும் தாக்கரே  நரேந்திர மோடி  உத்தவ் தாக்கரே  சிவ சேனா
Uddhav Thackeray to meet PM Modi Thackeray to meet PM Modi Uddhav Thackeray to meet PM Modi on maratha issue Uddhav Thackeray to meet Modi மோடியை சந்திக்கும் தாக்கரே நரேந்திர மோடி உத்தவ் தாக்கரே சிவ சேனா

டெல்லி: நரேந்திர மோடி- உத்தவ் தாக்கரே சந்திப்பு நாளை டெல்லியில் நடைபெறுகிறது.

மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக அண்மையில் (மே) உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. உண்மையிலேயே மராத்தா சமூகத்தினர் சமூகத்தில் பின்தங்கியுள்ளனரா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.

மராத்தா இடஒதுக்கீடு

மேலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவும் மறுத்துவிட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தில், “மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும்” எனக் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் நாளை பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உத்தவ் தாக்கரே சந்தித்து பேசுகிறார்.

மறுப்பு

இந்தத் தகவலை சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்க மறுப்பு தெரிவித்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

அப்போது, ஏற்கனவே 50 விழுக்காடு இடஒதுக்கீடு அமலில் இருக்கும்போது அதற்கும் கூடுதலாக இடஒதுக்கீடு அளிக்க வேண்டிய அவசியம் ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஸ்கெட்ச்- சிக்கிய பாஜக, அடித்து துவைக்கும் விஜயன்!

ABOUT THE AUTHOR

...view details