மும்பை: மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை (மே1) மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கூறுகையில், இந்துத்துவாவை பரப்புரை செய்வதற்காக கூட்டணி என்ற சாக்கில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவை பாஜக அடிக்கடி ஏமாற்றியுள்ளது. நான் எனது தந்தையைப் போல "ஏமாறக்கூடியவர்" அல்ல என்றும் உத்தவ் கூறினார்.
இது குறித்து உத்தவ் தாக்கரே, “என் தந்தையை போல் நான் ஏமாறக் கூடியவன் அல்ல. என் தந்தைக்கு சில அப்பாவித்தனம் (Tase Balasaheb Bhole Hote, Pun Me Nahi) இருந்தது” என்றார். தொடர்ந்து, “பாஜகவின் சதித் திட்டத்தை வெற்றி பெற நான் அனுமதிக்க மாட்டேன். நான் அவ்வளவு ஏமாளி இல்லை. பாஜகவின் நிகழ்ச்சி நிரலை நன்கு நான் அறிந்துள்ளேன்.
இந்துக்கள் ஏமாளி அல்ல: இவர்களால் நடத்தப்படும் இந்துத்துவா கொள்கைகளால் மாட்டிக்கொள்ளும் அளவுக்கு மகாராஷ்டிராவில் உள்ள இந்துக்கள் ஏமாளிகள் அல்ல. மகாராஷ்டிராவை அவர்களிடம் இருந்து மீட்டெடுக்க உதவுங்கள்” என்றார். பின்னர், இந்துத்துவ பெயரில் மட்டுமே பாஜக சிவசேனா கூட்டணி அமைந்தது. சிவசேனா இந்துத்துவ ஆட்சி அமைக்க 1987இல் வேட்பாளர்களை களமிறக்கியது. அப்போது சிவசேனா வேட்பாளர்களுக்கு எதிராக பாஜக வேட்பாளர்களை நிறுத்தியது.
இந்துத்துவா என்ற பெயரில் மட்டுமே பாஜக-சிவசேனா கூட்டணி உள்ளது என்பதை பாஜகவுக்கு முதல்வர் நினைவூட்டினார். சிவசேனா 1987 இல் இந்துத்துவா என்ற பெயரில் தனது முதல் தேர்தலில் வில் பார்லேயில் தனியாகப் போராடி வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் சிவசேனாவுக்கு எதிராக பாஜக வேட்பாளர்களை நிறுத்தியது.