தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கன்ஹையா லால் கொலை வழக்கில் கைதானவர்கள் மற்றொருவரையும் கொல்ல திட்டமிட்டதாகத் தகவல்! - ஐஎஸ் தொடர்பு

கன்ஹையா லால் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் உதய்பூரில் மற்றொரு தொழிலதிபரை கொல்ல திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Udaipur
Udaipur

By

Published : Jun 30, 2022, 4:47 PM IST

உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் கடந்த 29ஆம் தேதி கன்ஹையா என்ற நபர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய நூபுர் சர்மாவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக இந்த கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முகமது ரியாஸ் மற்றும் கௌஸ் முகமது ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்திருந்தது. இருவரும் அடுத்தகட்ட விசாரணைக்காக டெல்லி அழைத்துச்செல்லப்படவுள்ளதாகவும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், மடிக்கணினிகள் தடயவியல் பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதாகவும் என்ஐஏ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சந்தேகத்திற்கிடமான மேலும் ஐந்து பேரை கைது செய்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கன்ஹையா லால் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் உதய்பூரில் மற்றொரு தொழிலதிபரை கொல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அவர் வெளியூரில் இருந்ததால் தப்பித்துவிட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த தொழிலதிபரும் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும், அதற்காக போலீசார் அவரை கைது செய்து, பின்னர் விடுவித்ததாகவும் தெரிகிறது.

அதன் பிறகு பலரும் அவரது கடைக்குச் சென்று மிரட்டி வந்ததால், அந்த தொழிலதிபர் வெளியூர் சென்றுவிட்டதாக, தொழிலதிபரின் தந்தை தகவல் தெரிவித்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது ரியாஸ், கௌஸ் முகமது இருவருக்கும், ஜெய்ப்பூரில் தொடர் குண்டுவெடிப்பு நடத்த சதித்திட்டம் தீட்டியதிலும் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: உதய்பூர் கொலை வழக்கில் பயங்கரவாதிகளுக்கும் தொடர்புள்ளது - ராஜஸ்தான் உள்துறை அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details