தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'உதய்பூர் கொலை: பயங்கரவாத அமைப்புக்குத்தொடர்பில்லை...ஆனால்':என்ஐஏ புதிய தகவல்!

உதய்பூரில் டெய்லர் கொலை செய்யப்பட்டதற்குப் பின்னணியில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில்லை என்றும்; மாறாக பயங்கரவாத கும்பலுடன் தொடர்பிருப்பதாக தேசிய புலனாய்வு முகமை சந்தேகிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

By

Published : Jul 1, 2022, 8:58 PM IST

உதய்பூர் கொலை
உதய்பூர் கொலை

டெல்லி: ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த டெய்லர் கன்ஹைய லால் என்பவர் கடந்த ஜூன் 28ஆம் தேதி இரண்டு நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கன்ஹைய லால் கருத்துப்பதிவு செய்ததால், அவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்தது.

கொலையாளிகள் ரியாஸ் அக்தாரி, கௌஸ் முகமது வெளியிட்ட வீடியோவில், கொலையை ஒப்புக் கொண்டும், பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்தும் பேசியிருந்தனர். பின்னர் சில மணி நேரங்களிலேயே ரியாஸ், முகமது கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்தநிலையில், இவ்வழக்கில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்புள்ளதாக முன்னர் கூறப்பட்டது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் நேற்று (ஜூன் 30)கூறுகையில், 'முதற்கட்ட விசாரணையில், பயங்கரவாத அமைப்புக்குத் தொடர்புள்ளதாக தெரியவில்லை. ஆனால் அதே வேளையில் பயங்கரவாத கும்பல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், சம்பவத்தில் இருவருக்கு மட்டும் தொடர்பில்லை. பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த பலர் இருக்கலாம்’ எனவும் கூறினர்.

தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு வழக்குத் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரியாஸ், முகமது ஆகியோர் ஜெய்ப்பூர் அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்படுவார்கள் என்றும் டெல்லிக்கு அழைத்து வரப்பட மாட்டார்கள் என்றும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: உதய்பூர் கொலை வழக்கில் பயங்கரவாதிகளுக்கும் தொடர்புள்ளது - ராஜஸ்தான் உள்துறை அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details