நாஷிக்:மகாராஷ்டிராவின் நாஷிக் நகரில் பிம்பால்கான் பகுதியில் ஆற்றுப்பாலம் ஒன்று உள்ளது. அங்கு நண்பகல் பொழுதில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய ஒருவர் தயாராக இருந்துள்ளார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர், சத்தமில்லாமல் வந்து தங்களது வாகனத்தை நிறுத்தி, ஆற்றுப் பாலத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருப்பவரை கவனித்துள்ளார்.
இளைஞர் பார்ப்பதைக் கவனித்த அந்த நபர் உடனடியாக, ஆற்றில் குதிக்க முற்பட்டார். அப்போது அவர் தக்க சமயத்தில் அந்த நபரின் கையைப் பிடித்துவிட்டு, உதவிக்கு மற்றவரையும் அழைத்தார். பின்னர் அருகில் இருந்தவரும் சேர்ந்து பாலத்தில் விளிம்பில் தொங்கிக்கொண்டிருந்த நபரை, இழுத்து பாலத்தின் மேல், கொண்டுவந்தனர். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.