ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் 2 வயது பெண் குழந்தை அங்கிதா குர்ஜார் இன்று (செப். 15) 120 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தௌசா போலீசார், மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தௌசா போலீசார் தரப்பில், இந்த சம்பவம் ஜஸ்பதா கிராமத்தில் நடந்துள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த 2 வயது குழந்தை அங்கிதா இன்று காலை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
ராஜஸ்தான்: 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை - borewell accident in dausa
ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் 2 வயது பெண் குழந்தை 120 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. மாநில பேரிடர் மீட்பு குழு தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளது.
ராஜஸ்தானில் 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை
அந்த ஆழ்துளை கிணறு 120 அடி ஆழம் கொண்டது. சுமார் 60-70 அடி ஆழத்தில் சிறுமி சிக்கியுள்ளார். கிணற்றின் பக்கவாட்டில் குழி தோண்டும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. ஜேசிபி இயந்திரங்கள், டிராக்டர்கள் மூழு வீச்சில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இன்னும் சில மணி நேரங்களில் குழந்தையை மீட்போம். குழந்தை நலமாக உள்ளது. குழாய்கள் மூலமாக ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுவருகிறது எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:காஷ்மீரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு