பெங்களூரு:கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர், ஃபாசிலா. இவர் தனது 2 குழந்தைகளுடன் அதேபகுதியில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். இந்த ஆட்டோவை ஓட்டுநர் காலித் என்பவர் இயக்கி உள்ளார். அவருடன் அவரது மனைவி டசீனாவும் பயணம் செய்து கொண்டிருந்தார்.
இந்த ஆட்டோ பெங்களூருவில் உள்ள கிருஷ்ணராயபுரம் என்னும் கே.ஆர்.புரத்தில் இருக்கும் ஆர்டிஓ அலுவலகம் முன்பு வந்து கொண்டிருந்த போகு வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணித்த ஃபாசிலா மற்றும் டசீனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர், அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.