தமிழ்நாடு

tamil nadu

போலி அடையாள அட்டையுடன் நுழைந்த இருவர் கைது.. நேபாள எல்லையில் பதற்றம்!

By

Published : Nov 28, 2022, 7:45 PM IST

இந்தியா - நேபாள எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு வெளிநாட்டவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து போலி அடையாள அட்டைகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

Etv Bharatஇந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த வெளிநாட்டவர்கள் கைது - போலி  அடையாள அட்டை பறிமுதல்
Etv Bharatஇந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த வெளிநாட்டவர்கள் கைது - போலி அடையாள அட்டை பறிமுதல்

சிலிகுரி: நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இரண்டு வெளி நாட்டவர்கள் இன்று (நவ.28)அதிகாலை நேபாள எல்லை பகுதியில் இந்தியாவுக்குள் நுழைய முயற்சி செய்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த பாதுகாப்புபடையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து பல போலி இந்திய அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் எல்லைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலிகுரியை ஒட்டியுள்ள கரிபாரி பிளாக்கில் இந்தியா-நேபாள எல்லையான பனிடாங்கியில் இருந்து ஆயுதம் ஏந்திய எல்லைப்படை வீரர்கள் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஜேம்ஸ் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த முகமது நூருல் இஸ்லாம் ஆகியோரை கைது செய்தனர்.

இந்தியாவில் நுழையும் முன் இருவரும் எப்படி போலி இந்திய அடையாள அட்டைகளை உருவாக்கினார்கள் என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் சிலிகுரி சப்-டிவிஷனல் நீதிமன்றதிற்கு அனுப்பப்பட்டனர்.

இதையும் படிங்க:பெண்களின் ஆடை குறித்து சர்ச்சை பேச்சு - வருத்தம் தெரிவித்தார் பாபா ராம்தேவ்...

ABOUT THE AUTHOR

...view details