ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள துர்கான் போஷ்னா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கு இடையே மோதல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் ராணுவம் இணைந்து நடத்திய இந்த தாக்குதலில் பங்கரவாதிகள் இருவர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
அத்துடன் இந்த தாக்குதலின் போது சரணடைந்த பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சுமார் மூன்று மணிநேரம் நீட்டித்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதியில் பங்கரவாதிகள் பதுங்கியிருந்ததாக கடந்த 9ஆம் தேதி அன்று ராணுவத்தினருக்கு துப்பு கிடைத்ததாகவும், அதைத்தொடர்ந்து நடைபெற்ற திடீர் தேடுதல் வேட்டையில் இவர்கள் பிடிபட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து இரண்டு ஏ.கே. 47 ரக துப்பாக்கி, 300 தோட்டாக்கள், ஒரு கிரெனெட் லாஞ்சர், 12 கிரெனெடுகள், 300 வெடிப்பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஐபோன் தொழிற்சாலையில் வன்முறை - ரூ.437.7 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்