ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சகுரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட கடும் துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, காஷ்மீர் ஐஜிபி விடுத்துள்ள தகவலில், சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர் இக்லாக் ஹஜாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.