தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் 2 பேருக்கு குரங்கம்மை அறிகுறி - டெல்லியில் குரங்கம்மை தொற்று

டெல்லியில் குரங்கம்மை அறிகுறிகளுடன் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Two suspected monkeypox patients admitted to Delhi LNJP Hospital
Two suspected monkeypox patients admitted to Delhi LNJP Hospital

By

Published : Aug 1, 2022, 5:22 PM IST

டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் குரங்கம்மை அறிகுறிகளுடன் 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தகவலில், இரண்டு பேரும் 30 வயதுடையவர்கள் என்பதும் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனை குரங்கம்மை தொற்றுக்கான சிறப்பு சிகிச்சை மையாமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக தனி வார்டுடன் 20 மருத்துவர்கள், 15 செவிலியர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கேரளாவில் குரங்கம்மை அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றுவந்த 22 வயது இளைஞர் நேற்று (ஜூலை 31) உயிரிழந்தார்.

இவரது மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் இதுவரை நான்கு பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கேரளாவில் உயிரிழந்த இளைஞருக்கு குரங்கம்மை உறுதி

ABOUT THE AUTHOR

...view details