ராஜ்கோட் மாவட்டத்தின் உப்லெட்டா பகுதியில் கட்லரி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு, இன்று (செப்.24) திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அங்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த தந்தை, மகன் ஆகியோரை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.