மைசூர் ராகவேந்திரா நகரில் வசிப்பவர் சுரேந்திரா. இவர் வீட்டின் முன்னே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக காரின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் நாசரேபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு வேறு இடங்களில் காரை சேதப்படுத்திய மர்ம நபர்கள்! - Bangalore Crime News
மைசூர் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். அதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பெங்களூர்: இரு வேறு இடங்களில் காரை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!
மற்றொரு புறத்தில் ஹுளிமாவு காவல் நிலையத்திற்குட்பட்ட நன்னப்பனஹள்ளியில் உள்ள சுகம படவனே என்ற இடத்தில் நேற்றிரவு(ஏப். 05) கார் மீது கல் வீசப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள் படிப்படியாக மீண்டும் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு'