தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Mumbai Building Collapse: மும்பையில் பால்கனி இடிந்து விபத்து: இருவர் பலி; மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு! - National Disaster Response Force

மகாராஷ்டிரா, விலே பார்லே கௌதனில் அமைந்துள்ள கட்டடத்தின் பால்கனியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 25, 2023, 7:44 PM IST

மும்பை: மகாராஷ்டிரா, விலே பார்லே கௌதனில் உள்ள நானாவதி மருத்துவமனைக்கு அருகில் செயின்ட் பிரேஸ் சாலையில் அமைந்துள்ள கட்டடத்தின் பால்கனியின் ஒரு பகுதி இன்று (ஜூன் 25) பிற்பகல் இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் உயிரிழந்ததாக பிரஹன் மும்பை மாநகராட்சி (Brihanmumbai Municipal Corporation) தெரிவித்துள்ளது. மேலும், இறந்தவர்கள் பிரிசிலா மிஸ்கிதா (65) மற்றும் ராபி மிஸ்கிதா (70) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதுமட்துமின்றி, விலே பார்லே கௌதனில் (Vile Parle Gaothan) காயமடைந்த, மேலும் ஐந்து பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஒரு ரெஸ்பான்ஸ் வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ்கள், போலீசார் என அனைவரும் சம்பவ இடத்தில் மீட்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல மற்றொரு சம்பவத்தில், மும்பை காட்கோபர் (கிழக்கு) ராஜாவாடி காலனியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், இருவர் சிக்கியுள்ள நிலையில், நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே மின் கம்பத்தை தொட்ட பெண் மின்சாரம் தாக்கி பலி!

மேலும், காட்கோபர் (கிழக்கு) ராஜாவாடி காலனியில் மூன்று மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர், இரண்டு பேர் இன்னும் இடர்பாடுகளின் உள்ளே சிக்கியுள்ள நிலையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. என்று மும்பையின் பேரிடர் மேலாண்மைத் துறையின் தலைமை அதிகாரி, பிரஹன் ரஷ்மி லோகண்டே கூறியுள்ளார்.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழு சம்பவ இடத்தில், கட்டிடத்தின் இடர்பாடுகளின் உள்ளே சிக்கிக்கொண்டு அஞ்சத்தில் உள்ளவர்களை கண்டுபிடித்து மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் உதவி கமாண்டன்ட் சரங் குர்வே கூறியபோது, "கட்டிடத்தின் இடர்பாடுகளின் உள்ளே சிக்கியிருப்பவர்களைக் கண்டுபிடிக்க தொடர்ந்து தீவிர முயற்யில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் குழுக்கள் மூன்று சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தரைத்தளம் முற்றிலும் இடிந்து விழுந்துவிட்டது. இருந்த போதிலும்கூட, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தொய்வில்லாமல் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Manipur Itham: ராணுவத்தினரை சுற்றி வளைத்த பொதுமக்கள்.. 12 பேர் விடுவிப்பு - நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details