ராஞ்சி:ஜார்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது பழங்குடியினப் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த 2 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து லோஹர்தகா போலீசார் தரப்பில், லோஹர்தகா மாவட்டத்தின் செரெங்டாக் காவல் நிலையப் பகுதியில் உள்ள தனது குடியிருப்புக்கு அருகே 50 வயது பழங்குடியினப் பெண் புல் வெட்டச் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த 2 காவலர்கள் அவரை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
அதன்பின் அவரது பிறப்புறுப்பை சிதைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின் அருகிலிருந்தவர்களால் மீட்கப்பட்ட அந்த பெண் லோஹர்டகா சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் உயர் சிகிச்சைக்காக ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அக்.5ஆம் தேதி நடந்துள்ளது.