அமராவதி(ஆந்திரா):ஆந்திரா மாநிலம், பெடமாண்டி போலவரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா பாபு (24).
இவர் தனது நண்பர் காசி சீனு(23) என்பவருடன் சேர்ந்து, கடந்த ஜூலை 29ஆம் தேதி மாலை 3.15 மணியளவில், ஏனாம் புறவழிச்சாலையில் உள்ள மதுபானக் கடைக்கு எதிரே உள்ள இடத்தில் மதுபானம் குடித்துள்ளார்.
இவர்கள் பக்கத்தில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று, மதுபானம் குடித்து கொண்டிருந்துள்ளது. அப்போது எதிர் கும்பலில் இருந்த ஒரு இளைஞரின் முடியைப் பார்த்து ராஜா பாபு கிண்டல் செய்துள்ளார். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சரமாரியான தாக்குதல்
ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், பீர் பாட்டில், கத்தி உள்ளிட்டவையால் ராஜா பாபு, காசி சீனுவை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜா பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காசி சீனுவுக்கு வயிற்றில் கத்திக் குத்தால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை ஏனாம் காவல் துறையினர் மீட்டு காக்கிநாடா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அந்தக் கும்பலிடம் சிவகணேஷ், அறிவுச்செல்வம் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
ஹெர் ஸ்டைலை கலாய்த்த இருவரை அடித்து கொன்ற கும்பல் அதில், கொலை செய்தது, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த பட்னாலா சின்ன சத்தியநாராயணன் (23), தம்மண்ணா சுப்பாராவ் (28), கேத்கிரி மணிகண்டன் (23), பெத்துரெட்டி ரோகித் (19), 17 வயது சிறுவன் ஒருவனும் எனத் தெரியவந்தது. கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.
சாலையோரம் மதுகுடிக்கும்போது, 17 வயது சிறுவனின் தலைமுடியை, ராஜாபாபு கேலி செய்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும், ஏனாம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த காசி சீனுவும் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:காவலரை மிரட்டிய அமைச்சர் சேகர் பாபுவின் உறவினர்