ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்திலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் புதுச்சேரியைச் சேர்ந்த இருவர் அறை எடுத்து தங்கியுள்ளனர். இன்று காலையில் இருந்து அவர்கள் தங்கியிருந்த அறை திறக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும், அவர்கள் உணவு எதையும் ஆர்டர் செய்யாததால் சந்தேகமடைந்த தங்கும் விடுதிப்பணியாளர்கள் பஞ்சகுடா காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து வந்த காவலர்கள், விடுதியின் அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய்குமார்(34), ஷியமளாதேவி(36) என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர்களின் தற்கொலைக்குத் திருமணத்தை மீறிய உறவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.