அகமதாபாத்: குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், இந்தியா - பாகிஸ்தான் கடல் எல்லைப் பகுதியில் இந்திய விமானப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இப்போது கட்ச் கடல் பகுதியிலிருந்து இரண்டு பாகிஸ்தான் மீனவர்களை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாசின் ஷேக்(35) மற்றும் முகமது ஷேக்(25) என்றும், இருவரும் பாகிஸ்தானின் சுஜாவலி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. ஹராமி நாலா கட்ச் பகுதியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.