அகமதாபாத்: குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இரண்டு பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் இன்று (ஆக 4) பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை தரப்பில், "இந்திய-பாகிஸ்தான் எல்லையான குஜராத் மாநிலத்தின் ஹராமி நாலா க்ரீக் பகுதியில் இரண்டு படகுகள் சந்தேகத்திற்கிடமாக திரிந்தன. இதையடுத்து இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்தோம். இரண்டும் பாகிஸ்தான் படகுகள்.
குஜராத் எல்லைக்குள் நுழைந்த 2 பாகிஸ்தான் படகுகள் - இந்தியாவில் பாகிஸ்தான் படகுகள்
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் இரண்டு பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கு முன்னதாகவே படகிலிருவர்கள் பாகிஸ்தான் கடல் எல்லைக்கு தப்பியோடிருக்க வேண்டும். இந்த படகில் சில மீன்பிடி உபகரணங்கள், வலைகள் மட்டுமே இருந்தன. போதைப்பொருள்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட ஆபத்தானவை எதுவும் இல்லை. இந்த பகுதியில் பாகிஸ்தான் மீனவர்கள் அடிக்கடி சட்டவிரோதமாக நுழைந்துவருவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் கடந்த மாதம் மட்டும் 4 பாகிஸ்தான் மீனவர்களுடன், 10 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் ரூ.1,400 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்